தப்பிச் சென்றார் கைதி: மூன்று பொலிஸார் பணி இடைநீக்கம்!
Saturday, March 4th, 2017
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த கைதி ஒருவர் தப்பிச் சென்ற சம்பவத்தையடுத்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய மூன்று பொலிஸார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளைச்சம்வத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில், கைதுசெய்யப்பட்ட சந்தெகநபர் ஒருவர் சுகயீனம் காரணமாக, மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் காரணமாக, மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் அதிகாரிகள் மூவரின், பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பிச் சென்றக் கைதியை, கைதுசெய்வதற்கான நடவடிக்கையில், மன்னார் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்

Related posts:
அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம்!
வடக்கில் இளைஞர் யுவதிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரல்!
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோகப் பணிகள் நிறைவடைகின்றது - யாழ் மாவட்ட அரசாங்...
|
|
|


