தனியார் மயப்படுத்தினால் போராட்டம் வெடிக்கும் இலங்கை ரயில்வே ஊழியர் சங்கம் எச்சரிக்கை!

அரசு ரயில்வேயை தனியார்மையப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதற்கு பலத்த எதிர்ப்பை தெரிவித்திருக்கும் ஐக்கிய இலங்கை ரயில்வே ஊழியர் சங்கம் அவ்வாறு தனியார்மையப்படுத்தினால் நாடு தழுவிய தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்திருக்கின்றது.
முன்னைய அரசின் பலவீனமான நிர்வாகம், கண்மூடித்தனமான செலவுகள், அரசியல் ஊடுருவல்கள், பின்வாசல் வழியான நியமனங்கள் போன்றவற்றால் இலங்கை ரயில்வே சீர்குலைந்து போயிருப்பதாகவும் அதை மறுசீரமைப்பதற்காக அதனைத் தனியாரிடம் ஒப்படைக்கப்போவதாகவும் தற்போதைய அரசு தெரிவித்து வருகின்றதெனவும் அந்த முயற்சிக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் அந்தச் சங்கம் சூளுரைத்துள்ளது. இலங்கை வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் ரெயில் பெட்டிகளை திருத்தும் பணியை இப்போது தனியாரிடம் ஒப்படைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுவருகின்றது. அதனைத் தொடர்ந்து முழு ரெயில்வேயின் நிர்வாகத்தையும் தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டமொன்றும் இருக்கின்றது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் தாங்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டி வருமென சங்கத்தின் செயலாளர் எஸ்.பி.விதானகே தெரிவித்தார்.
Related posts:
|
|