டெங்கு நோய் தொடர்பில் சுகாதார அமைச்சருக்க அக்கறையில்லை!

Sunday, May 14th, 2017

மாலபேசைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியைகாப்பாற்றுவதில் காட்டும் அக்கறையை, இந்தநாட்டில் டெங்குநோய் ஒழிப்பில் சுகாதார அமைச்சர் காட்டுவதில்லை என்றும், இதனால் நாடளாவியரீதியில் டெங்கு காரணமாகபாரிய அழிவுநிலை தோன்றியுள்ளதாகவும் அரசமருத்துவர்கள் சங்கம் தெரிவித்தள்ளது.

வரலாற்றில் மிகவும் பயங்கரமானவகையில் இந்தவருடமே இலங்கைமுகங்கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கும் இச்சங்கம் இந்தவருடத்தில் கடந்தநான்குமாதகாலப் பகுதியில் இலங்கையில் 43,915 டெங்குநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

இத்தொகைகளில் 41.4 வீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அதேநேரம், திருகோணமலை,மட்டக்களப்பு,யாழ்ப்பாணம்,அம்பாந்தோட்டை,கல்முனைபோன்றபகுதிகளிலும் பாரியளவில் டெங்குநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் மேல் மாகாணத்தில் டெங்கு நோய் காரணமாக இதுவரையில் 35 பேர் இறந்துள்ளதாகவும்இச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: