டெங்கு ஒழிப்பு வாரம்!
Monday, March 28th, 2016
இம்மாதம் 29ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரமாக அனுஷ்டிக்கப்படவுள்ளதாக சுகாதாரத்துரைப் பிரதியமைச்சர் பைசால் காசிம் தெரிவித்துள்ளார்.
இதனை முன்னிட்டு சுகாதார உயர் அதிகாரிகளும், பொலிஸ் உத்தியோகத்தர்கள் டெங்கு நுளம்பு வளரும் பிரதேசத்தினை இனங்காண வரும் போது அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தோடு, இத்திட்டத்தினை இவ்வாரத்துடன் கைவிடாது தொடர்ந்தும் வீட்டுச் சூழலை சுத்தமாக வைத்திருந்து டெங்கு நோயிலிருந்து நம்மையும் நமது பிள்ளைகளையும் காப்பாற்ற முன்வர வேண்டும் என பைசால் காசிம் மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
துரோகியாக இருந்தாராம் குமார் பொன்னம்பலம் - கோவிந்தன் கருணாகரம்!
இலுப்பையடி சந்தியில் தேங்கும் மழைநீர் - பயணிப்போர் சிரமம்!
நாடுமுழுவதும் இன்று சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் - லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
|
|
|


