டிஜிட்டல் உலகில் காலடி எடுத்து வைக்கும் இலங்கை நுகர்வோர் உரிமைகளுக்கான அமைப்பு!

Wednesday, March 15th, 2017

இலங்கையின் 34வது நுகர்வோர் உரிமைகள் தினம் இன்று (15) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நுகர்வோருக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் நுகர்வோருக்கான முதலாவது டிஜிட்டல் சேவைகளை – சமூக வலைதளக் கணக்கை – இலங்கை நுகர்வோர் உரிமை அமைப்பு ஆரம்பிக்கிறது.

இன்னும் சில மணி நேரங்களில் நெலும் பொக்குனவில் நடைபெறவுள்ள நுகர்வோர் உரிமைகள் தின நிகழ்வில் இந்தச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டு இந்த டிஜிட்டல் சேவையை ஆரம்பித்து வைக்கவுள்ளனர்.

இன்றைய நிகழ்வில் உள்நாட்டு பல்கலைக்கழகங்களின் கல்வியாளர்கள் பலரும் கலந்துகொண்டு உரை நிகழ்த்தவுள்ளனர். மேலும், நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நடத்தப்பட்ட ட்விட்டர் போட்டியில் கலந்துகொண்டு பரிசுபெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் உலக நுகர்வோர் மத்தியில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள்  பற்றிய சிறப்புரையொன்றை நுகர்வோர் சர்வதேச வலயத்துக்கான ஆசிய – பசிபிக் பிராந்திய திட்ட அதிகாரி சத்யா ஷர்மா ஆற்றவுள்ளார்.

நுகர்வோரின் உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை நுகர்வோர் மத்தியில் ஏற்படுத்த இது ஒரு வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related posts: