ஜனாதிபதி தலைமையில் தேசிய தரச்சான்றிதழ்கள் விருது விழா!

Monday, January 30th, 2017

2016ஆம் ஆண்டுக்கான தேசிய தரச்சான்றிதழ்கள் விருது விழா ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  தலைமையில் இடம்பெற்றுள்ளது.

விஞ்ஞான, தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சுடன் இணைந்து செயற்படும் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் இந்த நிகழ்வு அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.

பேண்தகு அபிவிருத்திக்கான தேசிய கொள்கைக்கேற்ப செயற்படுகையில், அனைவருக்கும் அதிகளவு கடமைகளும் பொறுப்புக்களும் வழங்கப்படுவதால் அச்சவால்களை வெற்றிகொள்வதற்காக அவற்றின் தரம் மற்றும் நியமங்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி எதிர்காலத்திலும்; பணிகளை அவர்கள் சிறப்பாக மேற்கொள்வதற்கு அரசின் பரிபூரண ஒத்துழைப்பை பெற்றுத் தருவதாகவும் தெரிவித்தார்.

உயர்தரத்தில் அமைந்த நடுத்தர மற்றும் பாரிய அளவிலான உற்பத்திகளையும், சேவைகளையும் வழங்கும் வெற்றிகரமான நிறுவனங்களுக்கான சான்றிதழ்கள் ஜனாதிபதியினால் வழங்கிவைக்கப்பட்டது.

62d3efe37ac3f1d3d26a13f0dd4cd5a0_XL

Related posts: