ஜனாதிபதி தலைமையில் செயலமர்வு!

சிறுநீரக நோய் நிவாரண ஜனாதிபதி படையணி, சிறுநீரக நோயாளர்கள் உள்ள பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தும் சுத்தமான குடிநீர் சுத்திகரிப்புத் திட்டத்தின் கீழ் 250 ஆவது நீர் விநியோக கட்டமைப்பு இன்று திறக்கப்படவுள்ளது.
இதனுடன் இணைந்ததாக பிரதேச செயலமர்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. காலை 9 மணிக்கு ஹொறவப்பொத்தான ரிட்டிகஹாவௌ – சத்தர்ம ஜோதிகாராம விஹாரையில ஆரம்பமாகவுள்ளது.
இந்த வைபவத்திற்கு அமைவாக ஹொறவப்பொத்தான பிரதேசத்தில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கான சிகிச்சை சேவையும் இடம்பெறவுள்ளது. ஆரம்பத்திலேயே சிறுநீரக நோயை கண்டறிவதன் மூலம் அதனை கட்டுப்படுத்த முடியும். இதனால், இந்த சிகிச்சை சேவையில் கலந்து கொள்ளுமாறு சிறுநீரக நோய் நிவாரண ஜனாதிபதி படையணி பிரதேச மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
Related posts:
இலங்கை கடல் பகுதியில் உடைந்த விமான பாகம்? போலீசார் தீவிர விசாரணை!
இம்மாத இறுதிக்குள் 14 ஆயிரம் பட்டதாரி பயிலுனர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை - அமைச்சர் ஜ...
வடமராட்சியில் பட்டம் ஏற்றும் திருவிழா பணிகள் ஆரம்பம்!
|
|