ஜனாதிபதி ஜப்பான் விஜயம்!

பிரித்தானியா மற்றும் இந்தியாவுக்கும் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 15ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் எதிர்வரும் 25ம் திகதி ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பானில் நடைபெறும் ஜீ 7 நாடுகளின் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார். இலங்கையின் அரச தலைவர் ஒருவருக்கு ஜீ 7 பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை இதுவே முதன்முறையாகும்.
இம் மாநாட்டில் கலந்து கொள்ளும் நாடுகள் இலங்கையின் அபிவிருத்திக்கு உதவிகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படு கிறது. இம்மாநாட்டிலேயே அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவை இலங்கை ஜனாதிபதி சந்திப்பார் என ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|