ஜனாதிபதியின் உலங்குவானூர்தியை படம் எடுத்தவர் கைது!
Saturday, September 17th, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகொப்டரை படம் பிடித்த நபரொருவர் கைதுசெய்யப்படுள்ளார்.
குறித்த ஹெலிகொப்டர் பம்பலபிட்டிய பொலிஸ் மைதானத்தில் தறையிறங்கும் போது கைதுசெய்யப்பட்ட நபர் படம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர் லிந்துலை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.கைதுசெய்யப்பட்ட நபர் ஹெலிகொப்டர் தரையிறங்குவதை படம் பிடிக்க ஆசையாக இருந்ததால் படம் பிடித்தேன் என தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts:
வெளிநாடுகளில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு பிரச்சினையை தூண்டுகின்றனர்- நாடாளுமன்ற உறுப்பினர் வியாழ...
சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை!
நாட்டின் சில பிரதேசங்களில் மழை பெய்யக் கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|
|


