ஜனவரி தொடக்கம் கடவைகளில் வரி அறவீடுகள் நடைமுறைக்கு!

Tuesday, December 18th, 2018

சாவகச்சேரி பொதுச் சந்தையில் வரி அறவீடுகள் ஜனவரி தொடக்கம் முன்னைய காலங்களைப் போல கடவைகளில் வரிவசூலிப்பாளர்களால் மேற்கொள்ளப்படவுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள விற்பனைத் தொகைக்கான வரி அறவிடும் முறைகள் நிறுத்தப்பட்டு ஜனவரி தொடக்கம் கடவைகளில் வைத்து வரி அறவிடப்படவுள்ளது.

சந்தைக்கு பொருள்கள் கொண்டுவரும் உற்பத்தியாளர்கள் கடவையில் உரிய சிட்டையினைப் பெற்று சந்தைக்குள் பொருள்களைக் கொண்டு செல்ல முடியும். உள்ளே கொண்டுசெல்லப்படும் பொருள்களுக்கு வழங்கப்படும் வரிச் சிட்டைகள் பொருள் விற்பனை செய்யும் வரை வைத்திருக்க வேண்டும். பரிசோதனையின் போது பற்றுச்சீட்டு வைத்திருக்காதவர்களுக்கு மீண்டும் பணம் அறவிடப்படும்.

நீண்டகாலமாக சாவகச்சேரி நகர சபையில் காணப்பாட்ட வரிவசூலிப்பாளர்கள் பதவிகள் வெற்றிடமாக இருப்பதால் அலுவலகப் பணியாளர்களும் ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பணியாளர்களே பணியாற்றி வருகின்றனர். இந் நிலையில் சந்தையில் கடமையாற்றும் வரி வசூலிப்பாளர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு கடவைகள் சிலவற்றை மூடவேண்டியுள்ளது.

Related posts: