சைட்டமுக்கு எதிராக மருந்து நிறுவனங்கள் பின்னணி!

Monday, August 7th, 2017

சர்ச்சைக்குரிய மாலபேயில் அமைந்துள்ள தனியார் மருத்துவக் கல்லூரிக்கு (சைட்டம்) எதிரான செயற்பாடுகளுக்கு, இரண்டு மருந்து நிறுவனங்கள் நிதி வசதிகளை வழங்கி வருவதாக, அரசாங்கத்துக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது என, அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் செயற்பாடுகள் அனைத்தும், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாவே அமைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.  இதன்பிரகாரம், சைட்டமுக்கு எதிரான பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தின் போது, மாணவர்களின் போக்குவரத்துக்கென்று, பரிய நிதியை, இந்த இரண்டு நிறுவனங்களும் செலவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்காக, சில தொழிற்சங்கங்களுக்கும், குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களும் பணம் வழங்கியுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக, தான் அறிந்து வைத்துள்ளதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியதோடு, தன்னுடைய பதவியில் இருந்து, தன்னை விலக்கி வைப்பதற்காகவே, இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Related posts: