சுற்றுலா பிரதேசமாக மாற்றப்படும் தொண்டமானாறு அக்கரை கடற்கரை!

Wednesday, February 1st, 2017

தொண்டமானாறு அக்கரை கடற்கரை சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்கு இடமாக தற்போது மாறி வருகின்றது. இதனால் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

குறித்த கடற்கரையில் சீமெந்தினால் இருக்கைகள், நிழல் குடைகள் என்பனவும் அமைக்கப்பட்டுள்ளன. பிரதான வீதியில் இருந்து உள்ளக வீதி கொங்கிறீட்டினால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுவர்கள் தமது பொழுதுபோக்கினை மகிழ்ச்சியாக களிப்பதற்கு சிறுவர் பூங்கா ஒன்றும் உள்ளது. அக்கரை கிராம மக்கள் தமது மாதர் சங்கத்தின் ஊடாக கடற்கரையைச் சுற்றி தென்னை மரங்களை நாட்டி அதனை பராமரித்தும் வருகின்றனர்.

மேலும் கடலில் நீராடி விட்டு நன்னீரில் குளிப்பதற்குரிய வசதிகள் மற்றம் உடை மாற்றும் அறைகள் என்பனவும் காணப்படுவதால் பெண்கள், சிறுவர்கள் என தென்னிலங்கையில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் உள்ளுர் பயணிகளும் தமது பொழுதுபோக்கினை மகிழ்ச்சியாக களித்து வருவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இதற்காக யாழ் – பருத்தித்துறை பிரதான வீதியில் அக்கரை கடற்கரையைச் சுற்றுலா தளமாக காட்டிய வீதி குறியீட்டு பலகைகள் நிறுத்தியிருப்பதனை காணக்ககூடியதாக உள்ளது. பராமரிப்பு செலவிற்காக கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் இருந்து தலா 10ரூபா அறிவிடப்பட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

15731

Related posts: