சீரற்ற வானிலை – 3 மாவட்டங்களில் 1500 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்!

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 3 மாவட்டங்களில் 1500இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய மாத்தளை, கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 346 குடும்பங்களைச் சேர்ந்த 1,511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக 66 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு இருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.
மேலும் காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இலங்கையின் மேற்கு கரையை நோக்கி நகர்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
கட்டணங்களை குறையாது - முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் !
வீதி அபிவிருத்தி பணிகள் நடைபெறும் இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்...
வெளிநாட்டவர்களுக்கு இனி காணிகள் விற்கப்படமாட்டாது - அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!
|
|