சீரற்ற காலநிலை: மன்னாரில் மீனவர்கள் பாதிப்பு!

Wednesday, May 26th, 2021

மன்னாரில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை கடும் காற்றுடன் கூடிய கடல் கொந்தழிப்பு காரணமாக மீனவர்களின் வாடிகள் தூக்கி வீசப்பட்டதுடன் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளும் சேதமாகியுள்ளன.

செளத்பார், தாழ்வுபாடு, ஓலைத்தொடுவாய், வங்காலை, அச்சங்குளம், அரிப்பு உள்ளிட்ட  பல மீனவ கிராம கடற்பகுதிகளில் தொடர்ந்து அதிவேகமாக காற்று மற்றும் கடல் கொந்தழிப்பு காணப்படுவதால் கடல் நீர் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள்ளும் புகுந்துள்ளது.

அதே நேரம் மன்னார் செளத்பார் பகுதியிலுள்ள கடற்படை முகாமும் சேதமடைந்துள்ளது. தொடர்சியாக காற்று வீசுவதால் பாதிப்பு அதிகம் ஏற்படும் நிலை காணப்படுகின்றது.

கொரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரத்தினை இழந்துள்ள நிலையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மேலும் பாதிப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Related posts:

50 ஆவது நாள் போராட்டத்தை முன்னிட்டுப் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்ட விழிப்புணர்வுத் துண்டுப் பிரச...
சிறப்புத் தேவையுடையவர்கள் மற்றொரு நபரின் உதவியைப் பெற அனுமதிக்கப்படுவர் - தேர்தல்கள் ஆணைக்குழு அறிவ...
இலங்கையின் இறைமைக்கு ஒருபோதும் பாதிப்பை ஏற்படுத்தாது - இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்...