சிறைக் கைதிகள் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் பாரிய வீழ்ச்சி!
Tuesday, October 18th, 2016
நாட்டில் சிறைக் கைதிகள் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலைமையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டில் கைதிகளின் மனநிலைமையை மேம்படுத்துவதற்காக நடைமுறை ரீதியான பங்களிப்பை வழங்குமாறு மனோதத்துவ ஆலோசகர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டார்.
கடந்த வருடத்தில் ஆறு கைதிகளும், இந்த வருடத்தில் நான்கு கைதிகளும் சிறைச் சாலைகளுக்குள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் இதுதவிர சிறைச்சாலைகளுக்குள் பல்வேறு காரணங்களால் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 66 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய மேலும் தெரிவித்தார்.
கடந்த வருடத்தில் சிறைச்சாலைகளுக்குள் 93 கைதிகள் உயிரிழந்துள்ளமை பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்ட அவர் நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் சுமார் 18,000 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.

Related posts:
பரணகம ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!
தற்போதுள்ள நிலை தொடர்ந்தால் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது – அனைத்தும் மக்களின் கைகளில் ...
இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் விசேட சந்திப்பு!
|
|
|


