சாவற்கட்டில் பதனிடும் தொழிற்சாலை!
Wednesday, March 14th, 2018
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சாவற்கட்டில் கருவாடு பதனிடல் தொழிற்சாலை ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் அதற்கான திட்ட முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்.
சண்டிலிப்பாய் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
எமது பிரதேசத்தில் கைத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் பல திட்டங்களைச் செயற்படுத்தியுள்ளோம். சாவற்கட்டில் கருவாடு பதனிடும் தொழிற்சாலை ஒன்றை அமைக்க 5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டடங்கள் அமைக்கப்பட்டு பதனிடும் உபகரணங்களை நிறுவ வேண்டும். இந்தத் திட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று பிரதேச செயலர் தெரிவித்தார்.
கருவாடு பதனிடும் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்துக்கு கூட்டத்தில் ஏகமனதாக அங்கீகாரம் வழங்கப்பட்டது.
Related posts:
200 இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!
இடமாற்றம் வழங்கப்பட்டு பணிக்கு திரும்பாத 44 ஆசிரியர்களை பணி இடைநீக்கம் செய்யுமாறு ஆளுநர் சாள்ஸ் பணிப...
காற்றழுத்த தாழ்வு மண்டலம்; நாட்டின் பல பகுதிகளில் மேக மூட்டமான நிலை - வடக்கு, கிழக்கு, ஊவா உள்ளிட்ட ...
|
|
|


