சவர்க்காரத்திற்குள் கஞ்சா – மாட்டினார் குடும்பப் பெண்!
Sunday, September 3rd, 2017
சிறைச்சாலைக்கு சவர்க்காரத்திற்குள் வைத்து கஞ்சா கொண்டு சென்ற குடும்பப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவமொன்றையடுத்து குறித்த பெண் யாழ்.சிறைச்சாலை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் நடைபெற்றுள்ளது.
யாழ்.சிறைச்சாலைக்கு தனது கணவரைப் பார்க்கச் சென்ற கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவரை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பரிசோதனை செய்த போது கணவனுக்காக கொண்டு வந்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட பின்னர் குறித்த பெண் யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், குறித்த பெண்ணை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Related posts:
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திலுள்ள அயலுறவுச் செயலகத்தில் சுமார் 100 விண்ணப்பங்கள் ஒருவார காலத்திற்குள...
கொரோனா வைரஸ்: போலியான தகவலை பரப்பியவருக்கு விளக்கமறியல்!
பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை - ஐ.நா. பிரதிநிதிக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கம்!
|
|
|


