சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்றிரவு இலங்கை வருகை – எதிர்வரும் 17 ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என நிதி அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, January 10th, 2024

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் சிலர் இன்றிரவு (10) நாட்டிற்கு வருகைதரவுள்ளனர்.

நாளை (11) முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை அவர்கள் நாட்டில் தங்கியிருக்கவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் இதுவரையான முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வதே சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளின் பிரதான நோக்கமாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி கிடைத்ததன் பின்னர் நாட்டின் பொருளாதாரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பில் குறித்த குழுவினரால் ஆராயப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளுடன் IMF பிரதிநிதிகள் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: