சட்டத்தை மீறிய 13 வார்த்த்தகர்களுக்கு 42 ஆயிரம் ரூபா அபராதம்!

Wednesday, August 24th, 2016

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் சட்டத்தை மீறி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட 13 வர்த்தகர்களுக்கு 42 ஆயிரம் ரூபாவை அபராதமாக விதித்து உத்தரவிட்டார் மல்லாகம் மாவட்ட மேலதிக நீதவான் ரீ. கருணாகரன்.

நிர்ணயிக்கப்பட்ட விலைகளை மீறிப் பருப்பினை விற்பனை செய்த இரு வர்த்தகர்களும், காலாவதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 11 வர்த்தகர்களுமாக 13 பேருக்கு 42 ஆயிரம் ரூபா அபராதமாக விதிக்கப்பட்டது.

இவ்வாறு சட்டத்தை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட 14 வழக்குகளில் 13 வழக்குகள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை(22)  மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வர்த்தகர்கள் தங்கள் குற்றத்தினை ஏற்றுக் கொண்டதையடுத்தே

மல்லாகம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாவனை அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகள் அண்மையில் திடீர் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர். இதன் போதே பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் சட்டத்தை மீறி வர்த்தகர்கள் கையும் மெய்யுமாக மாட்டிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: