கொரிய மொழி தேர்ச்சி பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

Wednesday, March 7th, 2018

கொரிய மொழித் தேர்ச்சி பரீட்சைக்கு இம்முறை 22 ஆயிரத்து 551 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர் என  வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 19ம் திகதி முதல் மே மாதம் 4ம் திகதி வரை நடைபெறவுள்ள நிர்மாணத்துறைக்கான பரீட்சையில் 3,424 பரீட்சார்த்திகளும் மே மாதம் 25ம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 05ம் திகதி வரை நடைபெறவுள்ள தயாரிப்புத் துறைக்கான பரீட்சையில் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளனர்.

பணியகத்தின் இணையத்தளத்தின் மூலம் ஒவ்வொரு பரீட்சைக்கான பரீட்சார்த்திகளும் பரீட்சை நடைபெறும் தினம், காலம் மற்றும் பரீட்சை மத்திய நிலையம் தொடர்பான விடயங்களை பார்வையிட முடியும்.

Related posts: