கொக்குவில் பகுதியில் தாக்குதல் – இருவர் காயம்!
Monday, January 23rd, 2017
யாழ்ப்பாணம் – கொக்குவில் மேற்கு நந்தினி வெதுப்பக பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று மாலை அத்துமீறி நுழைந்த இளைஞர் குழுவொன்று வீடுகளுக்குள் இருந்தவர்களை தடி பொல்லுகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொஸிசார் தெரிவித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவர்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில் குடும்ப முறுகல் அடிப்படையில் குறித்த இளைஞர்கள் உள்நுழைந்து தாக்கியிருக்ககூடும் என்று தெரியவந்துள்ளது. தாக்குதல் மேற்கொண்ட இளைஞர்கள் குழு எந்தப்பகுதியினை சேர்ந்தவர்கள் என்று இதுவரையும் தெரியவில்லை என்று பொஸிசார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மேலதிக விசாரணையினை யாழ்ப்பாண பொஸிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related posts:
ஊடகவியலளார்களை தாக்குவதற்கு எவருக்கும் உரிமையும் இல்லை!
மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளனவா என ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை ஜ...
மட்டு மாவட்டத்தின் விவசாயத்துறை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்துவருகின்றது - இராஜாங்க அமைச்சர் சிவநேசது...
|
|
|


