கைதி மரணம்தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!
Tuesday, March 7th, 2017
பேலியகொட பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸ் அதிகாரிகளினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த ஐவரையும் இந்த மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கைதியின் மரணம் தொடர்பில், ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் கடந்த மாதம் 26ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
குறித்த நபர் திடீரென சுகயீனமுற்றதால் தேசிய மருத்துவமனையில் அனுமதித்ததை தொடர்ந்து அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுகாதார நடைமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் யாழ்.நகரில் மூடப்பட்டது திரையரங்கு!
இலங்கையில் உச்சபட்ச கொரோனா உயிரிழப்பு பதிவானது!
அமைச்சரவையின் பொறுப்பு அரசியலமைப்பு ரீதியாக அமைச்சரவை அமைச்சர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது – ஜனாதிபதி க...
|
|
|


