கெற்பேலி – கிளாலி வீதியை சீரமைக்குமாறு கோரிக்கை!

Saturday, February 9th, 2019

தென்மராட்சிப் பிரதேசத்திலுள்ள கெற்பேலி – கிளாலி வீதி மிக மோசமாக சேதமடைந்துள்ளமையால் போக்குவரத்தில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கெற்பேலியிலுள்ள 522 ஆவது படைத் தலைமையகத்திலிருந்து கிளாவி பாடசாலை வரையிலான ஏறத்தாழ சுமார் 2 கிலோ மீற்றர் நீளத்தைக் கொண்ட இந்த வீதி போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியாத நிலையில் மணலும் பள்ளங்களும் நிறைந்த வீதியாகக் காணப்படுகிறது.

முழை காலங்களில் வெள்ளம் பாய்ந்தோடும் வாய்க்கால் போன்றும் தண்ணீர் தேங்கி நிற்கும் இடமாகவும் இந்த வீதி உள்ளது. இந்த வீதியினூடாக தினசரி பயணம் செய்யும் பாடசாலை மாணவர்கள் வெளிமாவட்டத்திலிருந்து பணியாற்ற வரும் ஆசிரியர்கள், அலுவலர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்த வீதியைச் சீரமைத்துத் தர வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏதிர்வரும் மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் குறித்த வீதியைப் பாவனைக்கு உகந்தவாறு திருத்தி தரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts: