குவைத்தில் நிர்க்கதியான இருந்த 35 பெண்கள் நாடு திரும்பினர்!
Monday, August 29th, 2016
குவைத் நாட்டுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுச் சென்று, அங்கு பல்வேறு துன்புறுத்தல்களுக்கும் இலக்கான 35 பெண்கள் விஷேட விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இதேவேளை குறித்த பெண்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கும் இலக்கான நிலையில், குவைத் தூதரகத்தில் இருந்த பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 1183 பேர் இவ்வாறு, குவைத் தூதரகத்தில் தங்கியிருந்த நிலையில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
Related posts:
கழிவுகளை வீச வேண்டாம் - நல்லூர் பிரதேச சபை எச்சரிக்கை!
தனிமைப்படுத்தப்பட்டிருந்த கைதிகள் தப்பியோட்டம்- போகம்பறை சிறையில் ஒருவர் உயிரிழப்பு!
இலவச குடிநீர் இணைப்பைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள ...
|
|
|


