குழு மோதல்: பெண் உட்பட இருவர் காயம்!
Saturday, April 7th, 2018
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இடம்பெற்ற குழு மோதல் சம்பவத்தால் யாழ்ப்பாணம் இராசாவின்தோட்ட வீதி ரணகளமாக காட்சியளித்தது. வாகனங்களோ அல்லது நடையாகவோ போக முடியாதளவு அந்த வீதியெங்கும் வெற்றுக் கண்ணாடிப் போத்தல்கள் உடைக்கப்பட்டிருந்தன.
இந்த மோதல் சம்பவத்தில் பெண் உட்பட இருவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 9.30 மணிக்குப் பின்னர் மோதல் இடம்பெற்றுள்ளது. இரு தரப்பினர் மோதிக் கொண்டனர். இதில் வாள், கொட்டன், வெற்றுக் கண்ணாடிப் போத்தல், கம்பு போன்றன பயன்படுத்தப்பட்டுள்ளன. வாளால் வெட்டப்பட்டே இளைஞர் ஒருவர் காயமடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் நீண்ட நேரம் இடம்பெற்ற போதும் பொலிஸார் அங்கு வருகை தரவில்லை என அந்தப் பகுதி மக்கள் சிலர் தெரிவித்தனர். மோதல் சம்பவத்தால் இராசாவின்தோட்ட வீதி முழுதும் வெற்றுக் கண்ணாடிப் போத்தல்கள் உடைக்கப்பட்டுள்ளன. அவை வீதியில் நேற்று அதிகாலை வரை அகற்றப்படாமல் இருந்தன. சம்பவம் நடைபெற்று முடிவடைந்த பின்னர் அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர் சம்பவம் தொடர்பில் இருவரைக் கைது செய்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Related posts:
|
|
|


