குற்றவியல் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவில்லை!
 Thursday, September 22nd, 2016
        
                    Thursday, September 22nd, 2016
            
குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலத்தை முதலாவது வாசிப்புக்கென நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதன்நி மித்தம் நேற்று சபை நடவடிக்கைகளுக்கான ஒழுங்குபத்திரத்தில் உள்வாங்கப்பட்டிருந்த போதிலும்  சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. 
1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைச் சட்டத்தினை திருத்துவதற்கானதொரு சட்டமூலமாகவே குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்வாங்கப்பட்டிருந்தது.
நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்படுவதற்கென அந்த திருத்தச் சட்டமூலம் நேற்றைய ஒழுங்குப்பத்திரத்தில் உள்வாங்கப்பட்டிருந்த போதிலும் திட்டமிடப்பட்டிருந்த வகையில் அது சபைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. அரசின் தரப்பில் அது தொடர்பில் எதுவும் சபைக்கு தெரிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts:
எச்சரிக்கை! காலநிலை மாறுகின்றது!!
வடமாகாண ஆளுநர் மீன்பிடித்துறை அமைச்சர் சந்தித்துப் பேச்சு !
யாழ் - பல்கலை மாணவியின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குண...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        