குருநகரில் 60 இலட்சம் பெறுமதியான கஞ்சா மீட்பு!
Tuesday, July 5th, 2016
குருநகர் பகுதியில் 60 இலட்சம் பெறுமதியான 40 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் நேற்றையதினம் (04) ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருகநர் பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன வின் விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் அதனை வீட்டில் வைத்திருந்த உரிமையாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அரிசிக்கு நிவாரணம் தர கோரிக்கை!
தேர்தல் செலவுகளை இயலுமான அளவு மட்டுப்படுத்துங்கள் - மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு தேர்தல்கள் ஆ...
கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு சீனா ஆதரவளிக்கும் - மத்திய வங்கியின் ஆளுநர் நம்பிக்கை!
|
|
|


