குண்டுத் துகள்களுடன் இருப்பவர்களுக்கு பூரண சிகிச்சை!

யுத்தத்தின் போது பொதுமக்களுக்கு பாதிப்புகள் நிகழ்ந்தன என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். உடலில் குண்டுத்துகள்களுடன் இருப்பவர்களுக்கு பூரண சிகிச்சைகளை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகவிருக்கின்றது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அத்தோடு குண்டுதுகள்களுடன் வாழும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்பான உத்தியோகபூர்வமான அறிக்கை இதுவரையில் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்த பிரதமர் உரிய தகவல்கள் அடங்கிய அறிக்கையொன்றை தன்னிடத்தில் கையளிக்குமாறு கோரியதோடு உடன் மருத்துவ தேவைகள் காணப்படின் அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் கலந்தாலோசித்து உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Related posts:
|
|