குடும்ப சண்டை – கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட அம்மம்மா !
Thursday, August 8th, 2019
வடமராட்சி கிழக்கில் தனது பேரனின் தாக்குதலில் மூதாட்டியொருவர் உயிரிழந்துள்ளார். அண்ணன், தம்பிக்கிடையில் ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற சமயத்திலேயே அம்மம்மா உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு நடந்த இந்த சம்பவத்தில் சுப்ரமணியம் கங்கேஸ்வரி (72) என்பவரே உயிரிழந்தார்.
நேற்றிரவு சகோதரர்களிற்கிடையில் மோதல் ஏற்பட்டது. மூத்த சகோதரனை கத்தியால் குத்துவதற்கு இளைய சகோதரன் முயன்றான்.
அதை தடுக்க முயன்ற அம்மம்மாவின் நெஞ்சில் கத்தி பாய்ந்தது. காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், வழியில் உயிரிழந்துள்ளார். 16 வயது சுபாஸ் சஷிகரன் என்பவரே கத்தியால் குத்தினார். அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
Related posts:
மஞ்சள் கோட்டில் கால் வைத்தால் வாகனம் நிற்கும் என்ற நம்பிக்கை கொண்டோம் –கிளிநொச்சி விபத்தில் சிக்கி ச...
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதலாம் தொகுதி செயலிழப்பு - திருத்தப்பணிகள் நிறைவடைவதற்கு சுமா...
வெளிவிவகார அமைச்சர் வெளிநாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணங்களுக்காக மில்லியன் ரூபா செலவு தொடர்பான குற்ற...
|
|
|


