குடும்பங்களிடமிருந்தும் வரி அறிவிட திட்டம்!
Saturday, March 18th, 2017
இந்த வருடம் இறுதியில் ஒரு குடும்பத்திடம் 3 ஆயிரத்து 866 ரூபா வரியாக அறவிடுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றதாக ஜே.வி.பி.யின் மாகாண சபை உறுப்பினர் வசந்த சமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
வென்னப்புவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் கூறியுள்ளார். மீண்டும் கடன்பெறுவதற்கான ஒரு முயற்சியாக ஐந்து அரச நிறுவனங்களை ஒருங்கிணைத்து அரசாங்கம் உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டுள்ளது.
ஐந்து அரச நிறுவனங்களை செயல்திறன் மிக்கதாக மாற்றுவதற்காக நிதி அமைச்சின் கீழ் அவற்றை கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரச நிறுவனங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் அபிவிருத்தி செயற்பாடுகளை துரிதப்படுத்த முடியும் என குறிப்பிடுகின்றனர்.
அபிவிருத்தி என்ற போர்வையில், இலங்கையின் சொத்துக்களை விற்பனை செய்யும் முயற்சியே மேற்கொள்ளப்படுகின்றது என அவர் கூறியுள்ளார்.
Related posts:
|
|
|


