குடாநாட்டில் மரக்கறியின் விலை அதிகரிப்பு!

கடந்த வாரத்தில் பெய்த மழையை அடுத்து குடாநாட்டில் மரக்கறி வகைகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளன. திருநெல்வேலி, மருதனார்மடம், சுன்னாகம், கொடிகாமம் ஆகிய மரக்கறி சந்தைகளில் மரக்கறிகளின் விலை அதிகரித்தும் காணப்படுகின்றன.
கத்தரிக்காய், பயிற்றை, பாகல், வெண்டி, தக்காளி, பூசணி, பச்சை மிளகாய், வெங்காயம், போன்வற்றின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. அதனைவிட கீரையின் விலையும் அதிகரித்துக் காணப்படுகின்றது. கடந்த வாரத்தில் பெய்த மழையினால் மரக்கறி பயிர்களில் பூக்கும் மற்றும் காய்க்கும் தன்மை பாதிக்கப்பட்டிருப்பதாக செய்கையாளர்கள் தெரிவித்தனர். இதே சமயம் அநேகமான விவசாயிகள் மரக்கறி செய்கையிலும் ஈடுபட்டும் வருகின்றனர். அடுத்து வரும் மாதங்களில் மரக்கறி வகைகளின் விலைகள் சரியாகக் கூடும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
ஒக்டோபர் 3 விசேட நாடாளுமன்றக் கூட்டம்!
20 ஆவது திருத்த விவகாரம்: அரசு மீதான மக்களின் நம்பிக்கைக்குப் பாதிப்பு ஏற்படாது - அமைச்சர் ரோஹித அப...
நட்டத்தில் இயங்கிய இ.போ.ச. கடந்த வருடம் 2,000 மில்லியன் இலாபம் ஈட்டியுள்ளது - இராஜாங்க அமைச்சர் தில...
|
|