குடாநாட்டின் அபிவிருத்தி குறித்து ஆராய்வு!
Friday, April 29th, 2016
வடமராட்சி சுட்டிக்குளம் பகுதியை தேசிய பூங்காவாக மாற்றும் அபிவிருத்தி வேலைத்திட்ட ஆராய்வு கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
நெடுந்தீவு, சரசாலை, வடமராட்சி கிழக்கு பகுதிகளில் சூழலை பாதுகாத்து அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மக்கள் வருமானத்தினைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான வேலைத்திட்டங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
சரணாலயத்தில் இருந்து நகர் கோவில் பகுதியில் உள்ள பல இடங்களை மக்களுக்கு கையளிப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
சுண்டிக்குளம் பகுதியில் முன்னர் அறிவிக்கப்பட்ட பகுதிக்குள்ளே, மக்கள் இருப்பதனால், அந்த பகுதியை மீளாய்வு செய்யுமாறும் பணித்துள்ளார்.
எதிர்வரும் 3 மாத காலங்களில் இந்த வேலைத்திட்டங்கள் நிறைவு செய்யப்பட வேண்டுமென்றும் அமைச்சர் பணித்துள்ளார்
Related posts:
இலங்கையில் நேற்றைய 228 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினர்!
இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகர் கோபால் பாக்லே அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக நியமனம்!
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஏற்பாடு - எதிர்வரும் 24 ஆம் திகதி கதிர்காமக் கந்தனின் திருவுருவ...
|
|
|


