கீரிமலை கேணியில் முழ்கி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!
 Tuesday, November 15th, 2016
        
                    Tuesday, November 15th, 2016
            
யாழ்ப்பாணம், கீரிமலை கேணியில் குளித்த நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த வடிவேலு சுபாஸ்கரன் வயது(38) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
உறவினர் ஒருவரின் அந்தியெட்டி கிரியைகள் செய்வற்காக சென்ற மேற்படி நபர், கேணியில் நீராடச்சென்றிருந்தார்.
குறித்த நபர் நீரில் மூழ்குவதை அவதானித்தவர்கள் அவரை மீட்டு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்ற போதும், அவர்; ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறினர்.

Related posts:
அரச நிறுவன பிரதானி பதவிகளுக்கு 60000 பேர் விண்ணப்பம்!
உயர்தர மற்றும் புலமை பரிசில் பரீட்சைகள் நடைபெறும் தினங்களின் மாற்றம் - கல்வி அமைச்சின் செயலாளர் தெரி...
தேவை ஏற்படின் பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்களுக்கு நான்காவது தடுப்பூசி - சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்ப...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        