கிளிநொச்சியில் உள்ளூர் உற்பத்திகளுக்கு விசேட விற்பனைக்கூடம்!
Friday, December 22nd, 2017
உள்ளூர் உற்பத்திகளை விப்பனை செய்வதற்கான சிறப்பு விற்பனைக்கூடம் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது.
“கூட்டுறவில் கூட்டுறவு” என்ற கருப்பொருளில் கரைச்சி பலநோக்குக்கூட்டுறவுச்சங்கத்தால் மெகா கோப்சிற்றிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த விற்ப்பனைக்கூடம் எதிர்வரும் முதலாம் திகதிவரை இயங்கவுள்ளது.
உள்@ர் உற்பத்தி மற்றும் உள்ளூர் உற்பத்திகளைச்சந்தைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் கடந்த 7 ஆம் திகதி யாழ்ப்பாணம் பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண கூட்டறவு அபிவிருத்தி ஆணையாளர் பொ.வாகீசன் தலைமையில் நடந்த இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து கோப் சிற்றிகளிலும் உள்@ர் உற்பத்திப்பொருட்களுக்கான விற்பனைக்கூடங்களை அமைப்பது என்ற தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைவாக கரைச்சி பலநோக்குக் கூட்டுறவுச்சங்கம் உள்ளூர் உற்ப்பத்திப்பொருட்களுக்கான விற்பனைக்கூடத்தை ஆரம்பித்துள்ளது.
Related posts:
|
|
|


