கிரிக்கெட் சபையின் முன்னாள் செயலாளரக்கு பிணை!

Monday, October 24th, 2016

இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் செயலாளர் நிசாந்த ரணதுங்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி கொழும்பு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் அருண டி சில்வாவை அச்சுறுத்தியதாக நிசாந்த ரணதுங்க மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பில் இன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் நிசாந்த ரணதுங்க முன்னிலையான போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும், 1 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

4nisan

Related posts: