காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் 5000 கடிதங்கள்!

Saturday, March 18th, 2017

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசைப் பொறுப்புக்கூற வலியுறுத்தியும், அவர்களுக்கு நடந்தது என்ன என்பதைத் தெரிவிக்க கோரியும் நாள் ஒன்றுக்கு 1000 கடிதங்கள் வீதம் 5ஆவது நாளாக நேற்று 5000 கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவாக காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலை என்ன, என்னும் தலைப்பில் ஜனாதிபதிக்கு நாள் ஒன்றுக்கு 1000 கடிதங்கள் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்ந நிலையில் இதுவரை 8,200 கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், வவுனியா பிரதான தபால் நிலையம் ஊடாக 5000 கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்கான்மை இனத்தைச் சேர்ந்தவர்களும் அரசிடம் நீதி கேட்டு கடிதங்களைக் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: