காணாமற்போனோர் தொடர்பான செயலகம் அடுத்த வருடம் ஜனவரியில் இயங்கும்!
Thursday, November 17th, 2016
காணாமற்போனோர் தொடர்பான செயலகம் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் செயற்படத் தொடங்கும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
காணாமற்போனோர் தொடர்பான செயலகத்தை அமைப்பதற்கான வர்தமானி அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டதும், இந்தச் செயலகம் இயங்கத் தொடங்கும். இந்தச் செயலகத்துக்கான ஏழு உறுப்பினர்களை அரசியலமைப்புப் பேரவை நியமிக்கும். அதேவேளை, உண்மை கண்டறியும் பொறிமுறை தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை ஆலோசனைச் செயலணி, ஜனாதிபதியிடம் முன்வைக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts:
இளைஞன் வெட்டிக் கொலை: பொலிஸார் தீவிர விசாரணை - முல்லைத்தீவில் சம்பவம்!
பதவி விலகப்போவதில்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்றும் அறிவிப்பு!
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பற்றிக் டிரஞ்சன் நியமனம் - பத்தாம் திகதிமுதல் கடமைகளை பொறுப்ப...
|
|
|


