காச நேய் தாக்கம் :யாழ்ப்பாணத்தில் கடந்த வருடம் 23 பேர் பலி!
Wednesday, January 4th, 2017
யாழ் மாவட்டத்தில் காசநோய்த்தாக்கத்தினால் கடந்த வருடம் 23 பேர் மரணமடைந்துள்ளதாக யாழ் மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி வைத்தியர் மணிவாசகம் தெரிவித்தார்.
2010ஆம் ஆண்டு 15 பேரும், 2011ஆம் ஆண்டு 12 பேரும், 2012ஆம் ஆண்டு 21 பேரும், 2013ஆம் ஆண்டு 21 பேரும், 2014ஆம் ஆண்டு 29 பேரும், 2015ஆம் ஆண்டு 27 பேரும் யாழில் காசநோயின் தாக்கத்தினால் மரணமடைந்துள்ளனர்.
மேலும், காசநோயின் தாக்கம் கண்டறியப்பட்ட முதல் இரண்டு மாதங்களுக்குள் அதிகளவான நோயாளர்கள் இறந்துள்ளனர் எனவும் வைத்தியர் மணிவாசகம் தெரிவித்துள்ளார்.

Related posts:
பெரிய வெங்காய உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடு!
அடுத்த வருடமே தேர்தல் - மஹிந்த தேசப்பிரிய!
விவசாயிகளுக்கு போதுமான அளவு எம்ஓபி மற்றும் யூரியா உரம் வழங்க விவசாய அமைச்சு தீர்மானம் !!
|
|
|


