காக்கைதீவில் களவாக கழிவுகள் கொட்ட முயற்சி: உழவு இயந்திரத்துடன் சாரதி கைது!
Thursday, January 12th, 2017
உணவுக் கழிவுகளை ஏற்றி வந்து திருட்டுத்தனமாக காக்கைத்தீவு பகுதியில் கொட்ட முயன்ற யாழ்.நகரின் மத்தியில் உள்ள பிரபல விடுதி ஒன்றின் உழவு இயந்திரம், மாநகர காவல் பிரிவால் கைப்பற்றப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
உழவு இயந்திரத்தின் சாரதியைக் கைது செய்த பொலிஸார் உழவு இயந்திரத்தையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
காக்கைதீவுப் பகுதியில் கழிவுகளைக் கொட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. சில தனியார் இரவு வேளைகளில் திருட்டுத்தனமாக கழிவுகளை கொட்டுவது அவதானிக்கப்பட்டது. கழிவுகளைக் கொட்டுவதால் ஏற்படும் அசௌகரியம் தொடர்பில் பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டது. அதையடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கையிலேயே உழவு இயந்திரம் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட சாரதி மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts:
அனர்த்தத்திற்கு 14, 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு!
பாவனையாளர் பாதுகாப்பு தினத்தையொட்டி கிராம மட்ட அமைப்புக்களுக்கு விழிப்புணர்வு!
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பம் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜி...
|
|
|


