கழிவுப் பொருட்களை சேகரிப்பதற்கு அரச அலுவலகங்களில் பெட்டிகள்!

யாழ். மாநகராட்சி மன்றம் திண்மக் கழிவுகளை அகற்றும் திட்டத்தின் கீழ் அரச அலுவலகங்களிலும் திண்மக் கழிவுகளை சேகரிப்பதற்கு வசதியாக கழிவுகள் சேகரிப்பு பெட்டிகள் வைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு முன்னோடியாக யாழ். பிரதேச செயலகத்தில் இந்தத் திண்மக் கழிவுகளை சேகரிக்கும் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
இதில் உக்கும் பொருட்கள், உக்காத பொருட்கள், கண்ணாடி வகையிலான கழிவுகள் ஆகியவற்றை சேகரிப்பதற்கான தரம் பிரித்த பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
மாநகரப் பகுதியில் திண்மக்கழிவகற்றும் திட்டத்தின் கீழ் கூடுதலான கழிவுகள் சேகரிப்பு பெட்டிகள் தயாரிக்கப்பட்டு அவை மாநகரசபை பகுதியின் முக்கியமான இடங்களிலும் வைக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு கழிவுகள் சேகரிப்பு பெட்டியில் தேங்கும் கழிவுகள் யாவும் தினமும் கழிவகற்றும் பிரிவினரால் அகற்றப்பட்டும் வருகின்றன.
Related posts:
மின்வெட்டுதொடர்பான நேர அட்டவணை வெளியானது !
2 இலட்சத்து 64,000 தடுப்பூசிகளுடன் இன்று அதிகாலை நாட்டுக்குள் வந்த விசேட விமானம்!
பசுமை பொருளாதாரம் மற்றும் பசுமை வலுசக்தி ஆற்றல் கொண்ட மாகாணமாக உருவாகின்றது வடக்கு - அதன் மையமாக பூ...
|
|