கழிவுகளை வீச வேண்டாம் – நல்லூர் பிரதேச சபை எச்சரிக்கை!

வீட்டில் சேகரிக்கப்படும் குப்பைகள், கழிவுகளை வகைப்படுத்தி வைக்குமாறு நல்லூர் பிரதேச சபை பொதுமக்களைக் கேட்டுள்ளது.
பொலித்தீன் பைகள், பிளாஸ்ரிக் பொருட்கள், திண்மக் கழிவுகள், கண்ணாடித் துண்டுகள் ஆகியவற்றை வகைப்படுத்தி வீடுகளில் வைக்கவும். பிரதேச சபை வாகனங்கள் வீடுகளுக்கு வந்து அவற்றைச் சேகரிக்கும். பிரதேச சபை வாகனங்கள் வீடுகளிற்கு வந்து அவற்றைச் சேகரித்துச் செல்லும்.
எந்தக் காரணம் கொண்டும் சேகரிக்கப்படும் குப்பைகள், கழிவுகளை வீதிகளிலோ அல்லது வீட்டுக்கு வெளியிலோ வீச வேண்டாம். அவ்வாறு மீறிச் செயற்படுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நல்லூர் பிரதேச சபை எச்சரித்துள்ளது.
Related posts:
வரலாற்று பதிவான ஹர்த்தாலால் முடங்கிய இரத்தினபுரி!
சட்டவிரோத ஆட்கடத்தலை தடுக்க இலங்கை - இந்தோனேஷியாவுக்கு இடையில் உடன்பாடு!
உலக முடிவு பகுதியின் மலைத் தொடருக்கிடையில் கேபிள் கார்!
|
|