கண்ணிவெடி அகற்றாத பகுதிக்குள் செல்லாதீர் பிரதேச செயலர் எச்சரிக்கை!

Monday, December 5th, 2016

கிளிநொச்சி பச்சிலைப் பள்ளிப் பிரதேச செயலாளர் பிரிவில் அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதியினைத் தவிர கண்ணிவெடி அகற்றும் பணி இடம்பெறும் பகுதிக்குள் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பரமோதயன் ஜெயராணி தெரிவித்துள்ளார்.

முகமாலைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை வெடிபொருள் அகற்றபட்ட ஒரு பகுதி மீள்குடியேற்றத்திற்காக, மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமை சாயகத்தினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது. மக்கள் தங்களது பகுதிக்குள் செல்வதற்க ஆண்hவமாக ஊள்ளனர். இந்த நிலையில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலருடன் தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“தற்போது கண்ணிவெடி அகற்றும் பிரதேசம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடந்த மாதம் கண்ணிவெடிக்குள் சிக்கி இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயம் அடைந்தார். இனிவரும் காலங்களில் கண்ணிவெடி அகற்றாத பகுதிகளுக்கு மக்கள் அத்துமீறி சென்று தங்கள் உயிரை பறிகொடுப்பது ஏற்றுக்கொள்ளப்படாது. அதற்காகவே முன்னறிவித்தல் வழங்கப்படுகின்றது என்றார்.

unnamed-5-34

Related posts: