கண்டி வைத்தியசாலையில் மர்மம்! உடனடியாக மூடுமாறு உத்தரவு!!

Thursday, January 12th, 2017

கண்டி வைத்தியசாலையில் பரவி வரும் ஒருவித வைரஸ் காரணமாக உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இங்கு கடந்த 48 மணி நேரத்தில் மூன்று நோயாளிகள் திடீரென உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உடடியாக அமுலுக்கு வரும் வகையில், கண்டி பொது வைத்தியசாலையின் நோயாளர் அறை மூடப்பட்டுள்ளது.

கண்டி பொது வைத்தியசாலையின் 65ம் இலக்க நோயாளர் அறையை உடனடியாக அமுலாகும் விதமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் குறித்த அறையில் வேகமாக பரவும் வைரஸ் காரணமாக இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

625.500.560.350.160.300.053.800.900.160.90

Related posts: