கண்டி வைத்தியசாலைக்கு கொழும்பிலிருந்து விசேட வைத்திய குழு!

கண்டி போதனா வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் 69 ஆவது சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்களில் 3 பேர் திடீரென உயிரிழந்தமை தொடர்பில் ஆராய விசேட வைத்திய குழுவொன்று கொழும்பிலிருந்து கண்டிக்கு செல்ல உள்ளதாக சுகாதார சேவையின் பணிப்பாளர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.
சிறுநீரக நோய்களுக்கான சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்கள் மூன்று பேர் கடந்த ஞாயிற்றுக் கிழமை(8) திடீரென உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மேற்கொண்ட மருத்துவ சோதனையில் குறித்த நபர்கள் இன்ஃபுலுவென்சா ஏ எச்1என்1 என்ற நோயினாலேயே உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பான உண்மை நிலையை அறிவதற்காக இன்று விசேட வைத்திய குழு கண்டி வைத்தியசாலைக்கு செல்ல உள்ளதாக ஜயசுந்தர பண்டார தெரிவித்தார்.
Related posts:
110 அடி பள்ளத்தில் லொறி வீழ்ந்து விபத்து - இருவர் வைத்தியசாலையில்.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நீடித்த இடைவெளி அவசியம் - சுகாதார அமைச்சு!
உள்ளாட்சித் தேர்தல் முறையின் குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை - அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவிப்ப...
|
|