கட்டுநாயக்க விமான நிலையம் விரைவில் திறக்கப்படும்!

மூடப்பட்டுள்ள கட்டுநாயக்க விமானநிலையம் விரைவில் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் நுழையும் நபர்களுக்கு கொரோனா தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கான இயந்திரத்தை தயாரிக்கவுள்ளதாக அரச வைத்திய ஆய்வக விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. அவ்வாறு இயந்திரம் தயாரிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை மீண்டும் திறப்பதற்கு முன்னர் விமான நிலைய வாளத்திற்குள் ஆய்வக வசதிகளை தயார் படுத்துவது அவசியமான விடயமாகும் என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
விரைவில் பாவனைக்கு வருகின்றது மின்சார ரயில்!
போர்க் குற்றச் செயல் விசாரணைகளுக்கு கூடுதல் கால அவகாசம் கோரப்படும் - அமைச்சர் மங்கள சமரவீர!
யாழ் பல்கலை பட்டமளிப்பு விழா ஓக்.7 நிகழ்நிலையில் நடத்த மாணவர்களும் இணக்கம்!
|
|