கடவுச்சீட்டு விநியோகத்தில் சிக்கல்!

Wednesday, June 27th, 2018

இலங்கையின் வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை தடைப்படும் அறிகுறிகள் காணப்படுகின்றது என செய்திகள் வெளியாகியுள்ளன.

வெளிநாட்டு கடவுச்சீட்டு கையிருப்பு குறைவடைந்துள்ளது. கடவுச்சீட்டு விநியோகிக்கும் நிறுவனம் இதனை கடந்த வருடமே அரசிடம் அறிவித்துள்ளது.

அதற்காக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சால் புதிய தொகை பெற்றுக்கொள்வதற்காக கடந்த வருடம் நவம்பர் மாதம் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது.

எனினும் அதற்கு நிதி அமைச்சு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சினால் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து உள்ளக பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக அமைச்சால் 3 செயலாளர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்தது.

இரண்டு வாரங்களுக்குள் பரிந்துரை வழங்குமாறு குறிப்பிட்டே இந்த குழு நியமிக்கப்பட்டது. எனினும் அந்தக் குழுவின் முதலாவது கூட்டம் நடைபெற ஒன்றரை மாதம் கடந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய பிரச்சினைக்கு இந்த தாமதமே முக்கிய காரணமாக உள்ளது.

எனினும் வெளிநாட்டு கடவுச் சீட்டுக்கள் வேகமாகக் குறைவடைந்து வருகின்றமையால் 10 இலட்சம் புதிய கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை இணை குழு தீர்மானித்துள்ளது. கடந்த 14 ஆம் திகதி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது கடவுச்சீட்டு வழங்கும் நிறுவனத்திடம் அதற்கான கணக்கீடுகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று கூடும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் இன்றையதினம் அதற்கு அனுமதி கிடைத்தாலும் இலங்கைக்கு கடவுச்சீட்டு கொண்டு வருவதற்காக 5 மாதங்கள் செல்லும் என தெரியவந்துள்ளது.

கடவுச்சீட்டுக்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான கடித மூல செயற்பாட்டிற்கே ஒரு மாத காலம் செல்லும் என உள்ளக தகவல்களின் அடிப்படையில் கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Related posts:


அதிகளவான திருத்தச் சட்டங்களை முன்வைத்து நாளையதினம் கூடுகின்றது இவ்வாண்டின் முதலாவது நாடாளுமன்றம்!
ஜனவரி மாதம்முதல் அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவ...
பொருளாதார நெருக்கடியால் இலங்கை பின்தள்ளப்பட்ட தருணத்தில் வலிமையான அண்டை நாடாக இந்தியா வலுவூட்டியது -...