கடல் நீரை குடிநீராக மாற்ற விசேட திட்டம் – கடற்றொழில் நீரியியல் வள இராஜாங்க அமைச்சர்!

கடல் நீரை குடிநீராக மாற்றும் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும். இந்தத் திட்டத்திற்கு கொரிய அரசாங்கம் நிதியுதவி வழங்க முன்வந்திருப்பதாகவும் கடற்றொழில் நீரியியல் வள இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான ஆரம்ப ஆய்வு நடவடிக்கைள் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ரன்ன பட்டகத்த கரையோரப் பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கென கொரிய நாட்டை சேர்ந்த ஆய்வ குழுவொன்று வரவுள்ளது.
இந்த ஆய்வு நடவடிக்கைகள் வெற்றி பெறும் பட்சத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Related posts:
அதிகளவில் ஒன்று கூடுவதை தவிருங்கள் – அடியவர்களிடம் நல்லூர் தேர் உற்சவம் தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்...
அடுத்தவாரம்முதல் 125 ரூபாவுக்கு கீரி சம்பா - வர்த்தகத்துறை அமைச்சர் நடவடிக்கை!
இந்தியாவின் தொடருந்து தொழில்நுட்பத்தை இலங்கைக்கு வழங்க சம்மதம் - இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ...
|
|