கடற்றொழில் சமூகத்தினை மேம்படுத்தும் நோக்கில் ‘தியவர அருண’ வேலைத்திட்டம்!

Saturday, July 1st, 2017

கடற்றொழில் சமூகத்தினை மேம்படுத்தும் நோக்கில் ‘தியவர அருண’ என்ற தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார்.

பெலவத்த பாராளுமன்ற மாவத்தையில் அமைந்துள்ள தேசிய நீர்வள உற்பத்தி அபிவிருத்தி அதிகார சபையில் ‘தியவர அரண’ என்ற தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப வைபவத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றுகையில் இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

கடற்றொழில் சமூகத்தினரின் சிந்தனைகளை மேம்படுத்தி, வெற்றியை நோக்கி பயணிப்போம்’ என்ற தொனிப்பொருளில் ‘தியவர அரண’ என்ற தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக சமூக அடிப்படை முகாமைத்துவ வேலைத்திட்டமும் நீல பொருளாதாரத் திட்டமும், கடற்றொழில் துறையில் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளின் தரத்திற்கு உள்ளுர் கடற்றொழில் துறையை மேம்படுத்த தேவையான திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் கடற்றொழில் துறையினரை ஊக்குவித்து, சர்வதேச போட்டித் தன்மையுடன் கடற்றொழில் துறையை மேம்படுத்தி கூடுதலான பொருளாதார நன்மைகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

Related posts: