கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் மேலும் 2,248 பேருக்கு கொவிட் தொற்று!
 Sunday, June 20th, 2021
        
                    Sunday, June 20th, 2021
            
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 248 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்களில் 2 ஆயிரத்து 169 பேர் புத்தாண்டு கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன், 79 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.
இதையடுத்து, நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 37 ஆயிரதடது 661 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை குறித்த காலப்பகுதியில் நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து 2 ஆயிரத்து 134 பேர் குணமடைந்து சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதன்படி, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை, ஒரு இலட்சத்து 99 ஆயிரத்து 393 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் தொற்று உறுதியான 35 ஆயிரத்து 788 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        