கடந்த காலங்களில் பல்கலைக்கழகங்களில் வெளிவாரிப் பட்டப் படிப்பிற்களுக்கான பதிவுகளை மேற்கொண்டிருப்பவர்கள் எதிர்வரும் நான்கு வருடங்களுக்குள் பட்டப் படிப்புக்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்

பாடவிதானத்தில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ள காரணத்தால் கடந்த காலங்களில் பல்கலைக் கழகத்தில் வெளிவாரிப் பட்டப் படிப்பிற்களுக்கான பதிவுகளை மேற்கொண்டிருப்பவர்கள் எதிர்வரும் நான்கு வருடங்களுக்குள் பட்டப் படிப்புக்களைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டுமெனவும், அதன் பின்னர் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதால் இவர்கள் ஆரம்பத்திலிருந்தே கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் முன்னைய பாடத் திட்டப் பரீட்சைகளில் தோற்ற முடியாத நிலை ஏற்படும். எனவே, விரைவாகப் பட்டப் படிப்பினைப் பூர்த்தி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார் யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம்.
யாழ். பல்கலைக் கழகத்தில் வெளிவாரிப் பட்டப் படிப்பு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை (20-03-2016) யாழ். பல்கலைக் கழகக் கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றுகையில்,
பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவின் கட்டுப்பாடுகளுக்கு இணங்கப் பல்கலைக்கழக பாட விதானங்களை முற்றாக மாற்றியுள்ளோம். அதனால் தான் இரண்டு வருடங்களாக புதிய மாணவர்களை இணைக்கவில்லை. தற்போது புதிதாக மாணவர்களை இணைத்துக் கொள்ள விளம்பரங்கள் செய்து வருகின்றோம். பல்கலைக் கழகத்தில் வெளிவாரிப் பட்டப் படிப்புக்கான பதிவுகளை மேற்கொண்டவர்கள் சிலர் தொழில் குடும்பப் பொறுப்புக்களால் பரீட்சைக்கு விண்ணப்பித்தும் பரீட்சைக்குச் சமூகமலிப்பதில்லை. இதனால், நீண்ட காலமாகப் பட்டப் படிப்புக்களைப் பூர்த்தி செய்ய முடியாமலிருக்கின்றார்கள்.
பாடவிதானத்தில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ள காரணத்தால் கடந்த காலங்களில் பல்கலைக் கழகத்தில் வெளிவாரிப் பட்டப் படிப்பிற்களுக்கான பதிவுகளை மேற்கொண்டிருப்பவர்கள் எதிர்வரும் நான்கு வருடங்களுக்குள் பட்டப் படிப்புக்களைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டுமெனவும், அதன் பின்னர் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதால் இவர்கள் ஆரம்பத்திலிருந்தே கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Related posts:
|
|